தூத்துக்குடியில் சீட்டாவின் முப்பெரும் விழா

தூத்துக்குடியில் சீட்டாவின் முப்பெரும் விழா

தூத்துக்குடியில் சீட்டாவின் முப்பெரும் விழா

தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தான் பிறந்த தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் தவிர, தமிழ்நாட்டை இழிவுபடுத்தக் கூடாது.

அவ்வாறு தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் எவரும் தமிழன் என்பதற்கு அருகதை இல்லை.

அதுபோல "நாடு என்ன செய்தது?" என்று கேட்பவருக்கு நான் ஒன்று கேட்கின்றேன். "நீ என்ன செய்தாய் தமிழ்நாட்டுக்கு?" என்று நான் உன்னை கேட்டால் உன் பதில் என்ன!

நாடு செய்ய வேண்டியதை அது செய்யவில்லை, அல்லது செய்ய முடியாமல் போகும்போது, நமக்கு தகுதியும் திராணியும் இருந்தால் அதை ஏன் நாம் செய்யக்கூடாது.

அந்த நிலையை தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்தும் வகையில், வரும் *31/10/2026 ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் முப்பெரும் விழா* நடைபெற உள்ளது.

*முப்பெரும் விழா விவரங்கள்:*

*1. 157 CHEETA பணியாளர்களுக்கு தற்காலிக பகுதி நேர சமூக பணிக்கான பணி ஆணை வழங்கும் விழா*

*2. ZWAP - CNM மற்றும் CHEETA இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்ட 30 பிரான்சைஸி மூலம் 300 நபர்களுக்கு வேலை கொடுக்கும் திட்ட துவக்க விழா*

*3. மாசு இல்லாத வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை மாற்றிக் காட்ட மக்கும் பை அறிமுக விழா*

*விழா தலைமை மற்றும் முன்னிலை:*

இந்த முப்பெரும் விழாவை சீட்டாவின் சிறப்பு திட்டமான *அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின்* தூத்துக்குடி கோட்ட ஒருங்கிணைப்பாளர் S. டயனா தலைமை தாங்குகிறார்.

முன்னிலை வகிப்பவர்கள்:

- தூத்துக்குடி வட்ட ஒருங்கிணைப்பாளர் A. ஆரோக்கிய ஜெனிட்டா 

- விளாத்திகுளம் வட்ட ஒருங்கிணைப்பாளர் கொண்டம்மாள் முருகன்

- ஓட்டப்பிடாரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் *S. அஜிஸ் MSW*

*சீட்டாவின் CEO ஆட்லின் வலன்டீனா B.A., M.A.,* அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவங்கி வைக்க, *சீட்டாவின் நிறுவனர் லஞ்ச ஒழிப்பு ப.பாபு M.A., M.A.,* சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் ZWAP - CNM நிறுவன நிர்வாக இயக்குனர், சீட்டாவின் சிறப்பு திட்ட மாநில கூடுதல் ஒருங்கிணைப்பாளர்கள் * B.R. ரவிக்குமார் M.A., B.Ed., M.Phil., LLB, A. அறிவழகன், C. நெடுஞ்செழியன் BCA,* மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கோட்ட, வட்ட, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என சீட்டாவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.